மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

69பார்த்தது
மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
சின்னசேலம் மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 8: 30 மணிக்கு அம்மனுக்கு, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்ணியாகவஜனம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி, தனபூஜை நடந்தது. தொடர்ந்து மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேசிப்பலி, அங்கூரார்பனம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம். முதல் கால பூஜைகள் நடத்தப்பட்டது.

நேற்று காலை மங்கல இசையுடன் சோம கும்ப பூஜையும், மண்டப பூஜையும், கோ பூஜை, இரண்டாம் கால பூஜை நடத்தி, நாடி சந்தனம், திரவியம் பூர்ணாகுதி செய்து-, காலை 7: 30 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனிதநீரூற்றி, மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இத்துடன் விநாயகர், மதுரை வீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், ஆகிய பரிவார

தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 7 மணிக்கு மகாமாரியம்மன் சுவாமி, புஷ்ப அலங்காரத்தில் கோவிலில் இருந்து வானவேடிக்கையுடன், தாரை தப்பட்டை முழங்க திருவீதி உலா உற்சவம் நடந்தது.

தொடர்புடைய செய்தி