மேம்பால தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

65பார்த்தது
உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செம்மலை மகன் பிரகாஷ், 21; பாண்டூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1: 00 மணியளவில் நண்பரின் ஸ்பிளண்டர் பைக்கை வாங்கிக்கொண்டு உளுந்துார்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றார்.

கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி