இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

7116பார்த்தது
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 21-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி