கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள, மேல்சிறுவளூர் கிராமத்தில் இன்று வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் துணியை காய வைத்தபோது ராமு என்பவர் மீது மின்சாரம் தாக்கியது. அதனைப் பார்த்து அவரைக் காப்பாற்ற சென்ற அவரது மனைவி சரளா மீது மின்சாரம் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.