உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனா குப்பம் பகுதியில் இன்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நைனா குப்பத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது, இதனை சரி செய்ய ஊராட்சியிடம் பல முறை சொல்லியும் சரி செய்யாததால் இன்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை விரைந்து வந்து இவருடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு உள்ளது.