மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டில் கோவில் சிலை மற்றும் உண்டியல் உடைத்த நபரை கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முனியப்பர் கோவிலில் சிலை மற்றும் உண்டியல் உடைத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் மனைவி உஷாராணி, மகன் மகன் சிவா ஆகியோர் மீது வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.