தி. மு. க. , வேட்பாளரை ஆதரித்து மாவட்ட செயலாளர் பிரசாரம்

60பார்த்தது
தி. மு. க. , வேட்பாளரை ஆதரித்து மாவட்ட செயலாளர் பிரசாரம்
சங்கராபுரம் சட்டசபை தொகுக்குட்பட்ட வாணியந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தி. மு. க. , வேட்பாளர் மலையரசனை ஆதரித்து வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம். எல். ஏ. , தலைமையில் கட்சி நிர்வாகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமத்தில் திறந்த வேனில் ஓட்டு சேகரித்த வேட்பாளருக்கு பெண்கள் பலர் ஆரத்தி எடுத்தும், மலர்துாவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது உதயசூரியன் எம். எல். ஏ. , பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன.

மகளிருக்கான மாதந்தோறும் உரிமை தொகை திட்டம், அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் மிகப்பெரிய வரபிரசாதமாக அமைந்துள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தப்படுகிறது

அதேபோல், தற்போது தி. மு. க. , மற்றும் காங். , கட்சியின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது.

எனவே, தி. மு. க. , வேட்பாளர் மலையரசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி