விவசாயிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குணசேகரன், 40; விவசாயி. இவரை, அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன், கடந்த 23ம் தேதி மது அருந்தலாம் எனக்கூறி வௌியே அழைத்து சென்றார். அங்கு, மணிகண்டன் அவரது ஆதரவாளர்கள் அய்யம்பெருமாள், இளையராஜா, நரசிம்மன், சக்திவேல் ஆகியோர் சேர்ந்து குணசேகரனை திட்டி தாக்கி, மிரட்டி வெற்று பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை தேடிவருகின்றனர்.