கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் லோக் ஆதலாத் நடைபெற்றது

75பார்த்தது
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சையத் பர்ஹத்துல்லா, தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம், முதன்மை சார்பு நீதிபதி மைதிலி, கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது அலி, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிஹரசுதன், இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ரீனா முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல், பொருளாளர் இளையராஜா, மற்றும் ராமலிங்கம், அருண்பிரசாத் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், வேல்முருகன் உள்ளிட்ட மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 674 வழக்குகளுக்கு 2 கோடியே 47 லட்சத்து 23 ஆயிரத்து 118 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி