மாற்றுத்திறனாளிகள் 109 பேர்களுக்கு அடையாள அட்டை

77பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் 109 பேர்களுக்கு அடையாள அட்டை
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 109 பேர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் தினேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் லோகநாயகி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். 109 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி