கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசிற்கு எதிராக விண்ணை பிளக்கும் அளவிற்கு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.