குட்கா விற்ற 8 பேர் மீது வழக்கு

62பார்த்தது
குட்கா விற்ற 8 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் குட்கா விற்ற 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் குட்கா விற்ற கண்டாச்சிமங்களம் ரேவதி, விருகாவூர் சேட்டு, கள்ளக்குறிச்சி தனலட்சுமி, செல்வகிருஷ்ணன், அம்மகளத்துார் ராமமூர்த்தி, கொடுந்துரை சித்தன், லட்சியம் மணி, க. அலம்பலம் பன்னீர்செல்வம் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி