மத்திய அரசின் நிதியை சில மாநிலங்களுக்கு வழங்கிவிட்டு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதாக மத்திய பாஜக மோடி அரசை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தொடர்ந்து அல்வா கொடுக்கும் மத்திய அரசு என அல்வா கிண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே கவனம் பெற்றது.