சாலை விபத்தில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி பலி

1098பார்த்தது
சின்னசேலத்தில் பைக் விபத்தில் காயமடைந்த இறைச்சி வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சின்னசேலம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சதீஷ்குமார், 29; இறைச்சி வியாபாரி. இவர், கடந்த 5ம் தேதி மாலை 6: 00 மணியளவில் நைனார்பாளையத்தில் இருந்து டி. வி. எஸ். , மொபட்டில் சின்னசேலத்திற்கு சென்றார்.

சின்னசேலம் தில்லைநகர் பகுதியில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார்.

சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி