கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில், பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை என பல்வேறு துறை சார்ந்த 536 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.