இந்தியா - சீனா இடையே மான்சரோவர் யாத்திரைக்கான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே சந்திப்பு நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட கைலாஷ் மான்சரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.