யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கபட்டுள்ளது. அதனால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வழக்கை வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.