ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., கட்டிடங்கள் திறப்பு

572பார்த்தது
ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., கட்டிடங்கள் திறப்பு
ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்.பெலிக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.