உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், காளையிடம் இருந்து பெண் ஒருவர் நூலிழையில் உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவரின் காளை வெற்றி பெற்றதை அடுத்து, பரிசை வாங்க வாடிவாசலுக்கு வந்துள்ளார். அப்போது, அடுத்த காளை அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அப்பெண் கழுத்தில் முட்டி சொருக காளை பாய்ந்துள்ளது. நொடியில் உயிர் தப்பிய அப்பெண் பயமே இல்லாமல் வீரத்துடன் சிரித்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.