ஐடிஐ. படித்தவர்களுக்கு 15ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்

51பார்த்தது
ஐடிஐ. படித்தவர்களுக்கு 15ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 15ம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே.நகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. www.apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி