வேலூர் வீட்டிற்கு சோதனைக்கு வந்தது யார் என தெரியவில்லை என்றும் யார் என தெரிந்த பின்னால் பதில் சொல்வதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும், எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், சோதனைக்கு வந்தவர்கள் யார் என தெரியவில்லை என கூறியுள்ளார்.