இடது தோள் பட்டையில் வலி ஏற்பட்டாலே அது இருதயக்கோளாறுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என அர்த்தமில்லை. இருதயப்பகுதிகளில் வலி, நெஞ்சில் படபடப்பு, மூச்சுவிடுதலில் சிரமம் இருந்தால் அது இருதயம் தொடர்பானதாகும். கழுத்துப்பகுதி எலும்புகளுக்கு இடையே நரம்பு அழுத்தம், எலும்பு தேய்மானங்களால் தோள்பட்டை பகுதிகளில் வலி உருவாகும். இதை, உரிய பரிசோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டு மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.