இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளர் இவரா?

71பார்த்தது
இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளர் இவரா?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் அதில் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விளையாடிய கால கட்டத்தில் பீல்டிங் துறையில் தனி முத்திரை பதித்தவர்.

தொடர்புடைய செய்தி