வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தியும், எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி அறிவிக்கப்படுகிறது. டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2024 அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.