75 வயது மற்றும் 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை

7839பார்த்தது
75 வயது மற்றும் 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிக்குமார் (24) என்பவர் குடி போதையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரவிக்குமாரை அடித்து அவரது வீட்டில் விட்டனர். பின்னர் மீண்டும் அப்பகுதிக்கு வந்த அவர், வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின் மருமகள் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பின்னர் அப்பெண்ணின் கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ரவிக்குமாரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி