டி20 உலகக் கோப்பையின் 13வது ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியாவிடம் தோல்வியடைந்த அயர்லாந்து அணி, இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் எழுச்சி பெற காத்திருக்கிறது. இந்நிலையில், போட்டியை நடத்தும் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த கனடா, வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நியூயார்க்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.