கிருஷ்ணகிரி அருகே மாணவி பலாத்கார சம்பவத்தில் மேலும் 2 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளி நாளை 27ம் தேதி திறக்கப்படுகிறது. இது தொடர்பாக சிவராமன், உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, 1 வாரமாக செயல்படாத பள்ளி நாளை திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.