தமிழ்நாட்டின் முதல் பாசஞ்சர் ரயில் ஜூலை 1, 1856-ம் ஆண்டு சென்னை ராயபுரம் பகுதியில் இருந்து ஆற்காடு பகுதிக்கு (தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சாலை வரை) இயக்கப்பட்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 97 கி.மீ. இந்த ரயிலில் மொத்தம் 300 பயணிகள் பயணம் செய்தனர். இது தமிழ்நாட்டின் முதல் ரயிலாக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் முதல் ரயிலாகவும் அறியப்படுகிறது.