பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு

61பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் வாழ்த்துகளை பெற்றனர். தாயகம் திரும்பியுள்ள இந்திய வீரர்கள் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வருகை தந்தனர். இதன்பின்னர் பிரதமர் மோடியை டி20 உலகக் கோப்பையுடன் சந்தித்த இந்திய அணியினர் அவரிடம் வாழ்த்து பெற்றனர். இதன் பின்னர் மும்பை திரும்பும் இந்திய வீரர்கள் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊர்வலமாகச் செல்ல உள்ளனர்.

தொடர்புடைய செய்தி