ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை

62பார்த்தது
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை
தாய்லாந்தில் புக்கெட் நகரில் ‘சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு’ சார்பில் நடத்தப்பட்டு வரும் உலக கோப்பை தொடரில் 184 கிலோ எடையை தூக்கி 3வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. இதன் மூலம் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இந்தப் போட்டிதான், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான கடைசி தகுதி சுற்று போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மீராபாய் சானு, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது முறைப்படி அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி