“அமெரிக்காவில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்”

53பார்த்தது
“அமெரிக்காவில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும்”
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் இந்தியா இணைந்து பணியாற்றும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பேசிய ஜெய்சங்கர், “மற்ற நாட்டினர் நம்மைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டார்கள் என்று நாம் நம்புவதால், மற்றவர்களின் தேர்தல் குறித்து நாமும் கருத்து தெரிவிப்பதில்லை. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதில் இந்தியாவுக்கு முழு நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி