இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் - மு.க.ஸ்டாலின்

65பார்த்தது
இந்தியா கூட்டணி நாட்டை வழிநடத்தும் - மு.க.ஸ்டாலின்
நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். வெற்றியை வழங்கிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை கரம் குவித்து நன்றியை உரித்தாக்குகிறேன் என முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி