வாக்களித்த மக்களுக்கு நன்றி.. பிரேமலதா விஜயகாந்த்

64பார்த்தது
வாக்களித்த மக்களுக்கு நன்றி.. பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார். தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும் என அவர் தொண்டர்களிடையே கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி