சந்திரபாபு நாயுடுவை துணை பிரதமராக்க ஸ்டாலின் உதவ வேண்டும்

78பார்த்தது
சந்திரபாபு நாயுடுவை துணை பிரதமராக்க ஸ்டாலின் உதவ வேண்டும்
தமிழகத்தின் காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ், சந்திரபாபு நாயுடு துணை பிரதமராகவும்,உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய அரசியலில் அனுபவம் நிறைந்த சந்திரபாபு நாயுடு துருப்புச்சீட்டுகளை சரியாக பயன்படுத்துவார் என நம்புகிறோம். ஆந்திராவின் முதலமைச்சராக அவரது மகனை அமர்த்தி விட்டு, சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவி ஏற்க வேண்டும். இதற்கான முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து” என பதிவிட்டுள்ளார்.