உலகின் 31-வது பெரிய நகரம்; இந்தியாவின் 4-வது பெரிய நகரம் சென்னை. பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் சென்னை மாநகரம் இன்று (ஆகஸ்ட் 22) தனது 385-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை சீர்மிகு சென்னை.. சிங்காரச் சென்னை.. வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை என பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.