ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

63பார்த்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு 1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி