குரூப் 4ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அக்.28ஆம் தேதி அன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான அதே நாளில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. இந்நிலையில், மேலும் 41 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.