காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடியில் இருந்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.