ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 5.35 மணிக்கு புறப்பட்டும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மே 28, ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடைய உள்ளது.