தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்

70பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி