கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித் ஷெட்டி (42). விவசாயக் குடும்பத்தில் பிறந்த லோஹித் தனது தந்தை மற்றும் மாமா விவசாயம் செய்வதை சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தார். குடும்ப சூழலால் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு விவசாயத்தில் இறங்கி பல விஷயங்களை கற்றார். தற்போது ரம்புட்டான், டிராகன் பழம் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 1 கோடி வருமானம் ஈட்டுகிறார்.