"எதிர்காலத்தில் ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்"

63பார்த்தது
எதிர்காலத்தில் ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் உரையாற்றிய பெரியகருப்பன், "மாணவிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்ற மாணவர்களின் ஏக்கம் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்களுக்கு உரிமைத்தொகை தரவில்லையே என்ற ஒரு ஏக்கம் உள்ளது. அந்த ஏக்கத்தையும் எதிர்காலத்தில் தீர்த்து வைக்கும் சூழல் வரும்" என்று கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி