நடிகையுடன் தகாத உறவு - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்

10920பார்த்தது
நடிகையுடன் தகாத உறவு - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்
பிரபல கன்னட நடிகர் யுவராஜ்குமார். இவர் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் ஆவார். யுவராஜ்குமாரும், ஸ்ரீதேவி பைரப்பா என்பவரும் 2019-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்துள்ளனர். இதில் ஸ்ரீதேவி யுவராஜ்குமாருக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸில் யுவராஜ் குமாருக்கு சக நடிகையுடன் தகாத உறவு இருக்கிறது என்றும், இருவரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருந்தபோது பார்த்து விட்டதால் தன்னை அடித்து வெளியே தள்ளினார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும் விவாகரத்து என நிற்பது யுவராஜ்குமார் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி