தபால் நிலையங்கள் வழங்கும் திட்டங்களில் பிரபலமான ஒன்றாக ரெக்கரிங் டெபாசிட் உள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலமாக மொத்த முதலீடு தொகையாக ரூ.60,000 இருக்கும். இதற்கு தினமும் ரூ.165 சேமித்தால் போதும். 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் மொத்த முதலீடாக ரூ. 3 லட்சம் இருக்கும். இதற்கு 6.7% வட்டி கணக்கில் ரூ.56,830 கிடைக்கும். இதனால் 5 ஆண்டுகளில் முதிர்வு தொகையாக ரூ.3,56,830 முதலீட்டாளர் பெறலாம்.