ஆண்டுக்கு ரூ.299 செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்

27452பார்த்தது
ஆண்டுக்கு ரூ.299 செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மிகக் குறைந்த பிரீமியத்துடன் புதிய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு ரூ.299, ரூ.399 போன்ற குறைந்த அளவு பிரீமியத்துடன் ரூ.10 லட்சம் காப்பீடு பெறலாம். விபத்து மரணம், நிரந்தர ஊனம், உடல் உறுப்புகள் இழப்பு அல்லது செயலிழந்தால் பாலிசிதாரருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைய அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு இந்த பாலிசிக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி