கோயிலில் தேனீக்கள் தாக்கியதில் பக்தர்கள் காயம்

61பார்த்தது
கோயிலில் தேனீக்கள் தாக்கியதில் பக்தர்கள் காயம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. அங்கு, புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று (செப்.28) ஏராளமான பக்தர்கள் மலை ஏறி கோயிலுக்குச் சென்றனர். பக்தர்கள் இரண்டாவது மண்டபத்தை அடைந்த போது, அங்கு தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் பக்தர்களை தாக்கியது. இதில், 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி