மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று (ஜன.16) நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில் ஆட்சியர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “துணை முதலமைச்சர் நிற்கும்போது விதிகளின் படியே எழுந்து நின்றேன். புகைப்படங்களில் திரித்து சொல்லப்படுகிறது” என தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்பதியின் நண்பர்களுக்காக மேடையில் இருந்த ஆட்சியர் அவமதிக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.