பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக ஹாசானா எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வலின் காவலை வரும் 10ம் தேதி வரை நீட்டித்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. விசாரணையின் போது 'நான் நிரபராதி. சதி செய்து என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை' என பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.