சென்னை எழும்பூரில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். அதிமுக தோல்விக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும். அந்த கட்சி மக்களின் அபிப்பிராயத்தை இழந்துவிட்டது” என்றார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு, “ஜெயக்குமாருக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை” என காட்டமாக பதிலளித்தார்.