மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இளம்பெண் ஒருவரும் இளைஞரும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தை நாடினார். அண்மையில் மனைவியை பார்க்க வந்த கணவர் விவாகரத்து மனுவை திரும்ப பெறுமாறு அவரை மிரட்டியதோடு சில முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.